சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனமான பிளக்ஸ் மார்ட் என்ற மின்சார பேட்டரி தயாரிப்பு நிறுவனம் மின்சார நிறுவனங்களுக்கான பேட்டரி தயாரிப்பதற்கு நிதி திரட்டி உள்ளது. அதன்படி 3 கோடியே 63 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது அடுத்த 3 வருடங்களுக்குள் உள்நாட்டில் 10 லட்சம் சார்ஜர் போர்டுகளை தயாரிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் பிறகு 2025-ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் சார்ஜர் போர்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதோடு தற்போது கிடைத்துள்ள 3 கோடியே 63 லட்ச ரூபாய் நிதியை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு செலவழிக்க போவதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து பிளக்ஸ் மார்ட் நிறுவனம் பேட்டரி சார்ஜிங் தயாரிப்பு ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான மின்சார பேட்டரி மற்றும் ஜார்ஜிங் போர்டு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் பிளக்ஸ் மார்ட் நிறுவனமானது விவேக் சுவாமிநாதன் மற்றும் ராகவேந்திரா ரவிச்சந்திரன் ஆகியோரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.