தமிழ் சினிமாவில் பிரபலமுன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”துணிவு”.
இந்த படத்தில் மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா பாடல் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வைரலானது.
இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன்படி, ‘கேங்ஸ்டா’ என பதிவிட்டு இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஷபீர் என குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இது அடுத்த பாடலின் அறிவிப்பாக இருக்கும் என இணையத்தில் கூறி வருகின்றனர்.
https://twitter.com/GhibranOfficial/status/1605397908215410688