Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பறந்தது உத்தரவு…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு நடந்து விடக்கூடாது என்பதால் ரேஷன் கடைகளுக்கு இரவு நேரத்தில் பொருள்களை அனுப்பக்கூடாது. பகல் நேரத்தில் மட்டுமே அனுப்ப வேண்டும். இதை ரேஷன் கடை ஊழியர்கள் சரிபார்த்த பின்னரே கடைக்குள் அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |