Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு…. தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு கால அவகாசம் வழங்கி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 26ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.ஜனவரி 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜனவரி 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை கூடுதல் கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |