கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி ஓபிஎஸ் அந்த பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தான் தற்போது தொடர்வதாக கூறிய ஓபிஎஸ் சமீபத்தில் அதிமுகவிற்கு நிர்வாகிகளையும் நியமித்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் தலைமையில் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் அப்போது பேசிய ஓபிஎஸ், துணை முதல்வர் பதவி டம்மி என்பதால் அதை வேண்டாம் என கூறியதாக தெரிவித்தார். மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் நான்கரை வருடங்களும் நான் ஏமாற்றப்பட்டேன். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த ஈபிஎஸ்-ஐ நாடு மணிக்காது. உனக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்திப்பார், பப்பு வேகாது, அதிமுகவை கபலீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது என்று எச்சரித்தார்.