மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் கூப்பும் என்ற இடத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற 2 பள்ளிப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, யாரிபோக்கின் 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கவிழ்ந்து விபத்து நேர்ந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகார்வப்பூர்வ இறப்பு எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படாத நிலையில், 15 மாணவர்கள் இறந்திருக்கலாம் மற்றும் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎன்என்-நியூஸ் 18, லாங்சாய் டுபுங் கிராமத்திற்கு அருகே பிஷ்ணுபூர் – கௌபம் சாலையில் இந்த விபத்து நடந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் என் பிரேன் சிங், “இன்று பழைய கச்சார் சாலையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதைக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். மீட்புப் பணியை ஒருங்கிணைக்க எஸ்டிஆர்எஃப், மருத்துவக் குழு மற்றும் எம்எல்ஏக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பேருந்தில் உள்ள அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
#Breaking: Manipur: A school bus on a picnic trip met a road mishap at Tubung Nungai Old Cachar Road on December 21.
The students faced severe injuries and many of them succumbed to death. pic.twitter.com/8JGMUYwf0C— India Today NE (@IndiaTodayNE) December 21, 2022
Deeply saddened to hear about the accident of a bus carrying school children at the Old Cachar Road today. SDRF, Medical team and MLAs have rushed to the site to coordinate the rescue operation.
Praying for the safety of everyone in the bus.@PMOIndia pic.twitter.com/whbIsNCSxO
— N.Biren Singh (@NBirenSingh) December 21, 2022