பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்த சீசன் மற்ற சீசன்களை விட சற்று விறுவிறுப்பாக ஆரம்பத்தில் செல்லவில்லை. ஆனால் தற்போது சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
யார் அடுத்த பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வமாக விளையாடும் நிலையில் கடந்த வாரம் ஜனனி வெளியேறியதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த வாரம் ஓட்டிங்கின்படி மைனா நந்தினி வெளியேற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.