சென்னையில் எட்டாவது நாளாக விமானம் ரத்து, கொரோனா வைரஸ் பீதியால் சர்வதேச விமான நிலையத்தில், 18 விமானங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பீதியால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ந்து எட்டாவது நாளாக போதிய பயணிகள் இல்லாததால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கொழும்பு, துபாய், குவைத், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள், மற்றும் பல்வேறு நாடுகளிருந்து சென்னைக்கு வர வேண்டிய 18 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளை ஏற்றிச் செல்லும் டாக்சி ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகள் விசா வழங்குவதை கட்டுப்படுத்து வருகின்றது. இதன் காரணமாக வரும் நாட்களில் விமான நிலையங்கள் மேலும் வருவாய் நெருக்கடிக்கு உள்ளாகும் என கூறப்படுகிறது.