Categories
தேசிய செய்திகள்

ரயில்களை எண்ணுங்க!…. ஏமார்ந்துபோன தமிழர்கள்…. பணத்தை இழந்த சோகம்…. எச்சரிக்கை செய்தி….!!!!

ரயில்வேயில் வேலை தருவதாக சொல்லி ரூபாய்.2.67 கோடியை ஒரு கும்பல் நூதனமாக திருடி இருக்கிறது. இதுகுறித்து விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்புசாமி, டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், ரயில்வேயில் பயணச் சீட்டு பரிசோதகர், போக்குவரத்து உதவியாளர்கள், எழுத்தர் பதவி ஆகிய வேலையை வாங்கித் தருவதாகக் கோயம்புத்தூரை சேர்ந்த சிவராமன் என்பவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி எனக்கு எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறிய சிவராமனை நம்பி, சுப்புசாமி பணம் வழங்கி உள்ளார். அத்துடன் சுப்புசாமி தனக்கு தெரிந்த இளைஞர்களையும் இதில் இணைத்துள்ளார். இதன் வாயிலாக ஒரு நபர் ரூபாய்.2 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரையில் கொடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த பணத்தைப் பெற்ற மோசடி கும்பல், விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி எனக்கூறி டெல்லி ரயில் நிலையத்தில் வந்து செல்லும் ரயில்களின் வருகை மற்றும் அவற்றிலுள்ள பெட்டிகளின் எண்ணிக்கை போன்றவற்றை கணக்கிட கூறியுள்ளது. இதற்கிடையில் ஒவ்வொரு முறையும் மோசடி நபர்களை விண்ணப்பதாரர்கள், ரயில் நிலையத்துக்கு வெளியில் (அ) தனிப்பட்ட இடத்தில் மட்டுமே சந்தித்து உள்ளனர்.

இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 28 இளைஞர்கள், தான் ஏமாற்றப்படுகிறோம் எனத் தெரியாமலே தினசரி 8 மணிநேரம் ஒரு மாதத்துக்கும் மேலாக ரயில்களை கணக்கிடும் பணியில் ஈட்டுப்பட்டு இருந்தனர். இவற்றில் பல்வேறு இளைஞர்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்றவர்கள்” என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், பயிற்சி சான்றிதழ், பணி நியமன கடிதங்கள் போன்ற அனைத்தும் போலியானவை என கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் மோசடியில் ஈடுபட்ட விகாஸ் ராணா மற்றும் அவரது கூட்டாளியான துபே உள்பட குற்றவாளிகள் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |