Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

இங்க 16 நாள் ….. அங்க ”செம ட்ரீட்”….. புதுவை மாணவர்கள் மெர்சல் ….!!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருக்கின்றார்.

இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து அண்டை மாநிலமான புதுவையிலும் நாளை முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மார்ச் 31வரை என 16 நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்ட நிலையில் புதுவையில் மாணவர்களுக்கு காலவரையறையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் உத்தரவில் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்படும் என்று சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |