Categories
மாநில செய்திகள்

நாங்க ஓட்டு போடலானா ஜெயிச்சுருப்பீங்களா ? அமைச்சரிடம் பெண் ஆவேசம் …!!

விருதுநகரில் அமைச்சரிடம் இஸ்லாமிய பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகரில் நடைபெற்ற பெட்ரோல் டீசல் சில்லரை விற்பனை நிலைய தொடக்கவிழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு , அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது பாத்திமா என்ற பெண்  CAA , NRC குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். ஒருகட்டத்தில் ஆதங்கமடைந்த அந்த பெண் இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் அதிமுக ஆட்சிக்கு வந்து இருக்கமுடியுமா ? என்று  அமைச்சரிடம் முறையிட்டார்.

அந்தப் பெண்ணிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அமைச்சர் விளக்கமளித்தார். ஆனாலும் அமைச்சரின் விளக்கத்தை கேட்காமல் அந்த பெண் தொடர்ந்து அதிப்தியை வெளிப்படுத்தியதால் அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை அப்புறப்படுத்தப்படுத்தினர்.

 இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது தமிழகம் முழுவதும் சிஐஏ கண்டித்து தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழக அரசும் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொல்லி வருகின்ற நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

Categories

Tech |