தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் படத்திற்கு பிறகு வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் படத்தின் கதை சூர்யாவுக்கு செட்டாகாது என்று பாலா அறிவித்ததோடு சூர்யா படத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகு நடிகர் சூர்யாவும் வணங்கான் படத்திலிருந்து தான் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டதோடு படத்தை தயாரிக்கும் முடிவையும் கைவிடுவதாக அறிவித்தது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு பதில் அதர்வா படத்தில் கதாநாயகனாக நடிப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது அதர்வா நடிக்கவில்லை என்றும் நடிகர் அருண் விஜயிடம் தான் வணங்கான் படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனால் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.