Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா பீதி – சிக்கன் விலை சரிந்தது… மீனின் விலை எகிறியது..!!

கொரோனா வைரஸ் மற்றும் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக கோழியின் விலை சரிந்துள்ளது, மீன்களின் விலை எகிறியது..!

சென்னை புதுப்பேட்டை பகுதியில் கடந்த வாரம் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்ற கோழிக்கறி இன்று 100 ரூபாயாக சரிந்தது. ஆனால் நாட்டுக்கோழி கிலோ ரூபாய்280 விற்பனை ஆனாலும் மக்கள் அச்சமின்றி வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆட்டுக்கறி கிலோ ரூபாய் 740 ருக்கு விற்கப்பட்டதாக, மீன்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த விடுமுறை தினமான இன்று சென்னை மாநகரில் பல இடங்களில் சிக்கன் கடைகளில் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் மீன் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரிய மீன் சந்தைகளில் ஒன்றான சிந்தாதிரிப்பேட்டையில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூபாய் 100 லிருந்து 200 வரையும், சங்கரா மீன் ரூபாய் 200லிருந்து 250க்கும், வவ்வால் மீன் ரூபாய் 400 இல் இருந்து 450 க்கும், அயிரை மீன் ரூபாய் 100 லிருந்து 150 க்கும் விற்பனையானது அச்சுறுத்தலின் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் மீன்களை வாங்கி செல்வதாகவும், மீன் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாகவும் மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |