Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசுடன் போட்டியிடும் துணிவு படக்குழு… வெளியான ட்விட்டர் பதிவு… உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!

துணிவு திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். சென்ற 2014 ஆம் வருடம் விஜய்யின் ஜில்லா திரைப்படமும் அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்களுக்கு வெளியிடப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது.

இயல்பாகவே விஜய்-அஜித் ரசிகர்கள் இருவரும் மாறி மாறி சண்டை போடுவார்கள்.இந்த நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸில் நேரடி மோதல் ஏற்பட்டிருப்பதால் ரசிகர்களின் சண்டை எல்லை மீறி உள்ளது. வாரிசு திரைப்படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல துணிவு திரைப்படத்திலிருந்தும் சில்லா சில்லா, காசேதான் கடவுளடா பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் மூன்றாவது பாடல் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றது. இது குறித்து துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் கேங்ஸ்டா என பதிவிட்டு இருக்கின்றார். வருகின்ற 24-ஆம் தேதி இந்த பாடல் வெளியாக உள்ளது என சொல்லப்படுகின்றது. அதே 24ஆம் தேதி வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கின்றது. இதுதான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/GhibranOfficial/status/1605397908215410688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1605397908215410688%7Ctwgr%5Eb0f7c956f676776923ed8e8c8730bca58cf5f89d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fghibran-tweet-about-ajiths-thunivu-third-single%2Farticleshow%2F96388619.cms

Categories

Tech |