தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் தமிழகத்தில் மாண்டஸ்புயல் காரணமாக கடந்த பத்தாம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுணர் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி முற்பகல் 9.30 முதல் 12.30 வரை, பிற்பகல் 2.30 முதல் 5.30 என இரு வேலைகளிலும் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.