தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பேருந்து 42 லட்சம் ரூபாய் என்ற மதிப்பீட்டில் BS-VI வகை டீசல் பேருந்துகளை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் அறுபது சதவீதம் நகரப் பகுதிகளிலும் 40 சதவீதம் தொலைதூர பேருந்து சேவைக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பழைய பேருந்துகளில் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே சிந்துவதாக பல புகார்கள் தொடர்ந்து எழுந்த நிலையில் அரசு அதிரடி நடவடிக்கையாக தற்போது புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிட்டிருப்பது தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.