Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

எளிமையாக செய்யக்கூடிய முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட்!

தினமும் ஏதாவது ஒரு சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. முளைக்கட்டிய பயறு வகையை கொண்டு சாலட் செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான அன்றாட சத்துக்கள் கிடைத்துவிடும். முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சைப்பயறு – 100 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/2,
தக்காளி – 1,
மல்லித்தழை – சிறிது,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
துருவிய கேரட் – 50 கிராம்,
உப்பு – தேவைக்கு,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்.
மாதுளை முத்துக்கள் – கால் கப்,
பச்சை மிளகாய் – 1,
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து பச்சைப்பயறை தனியே எடுத்து வைக்கவும். 2 முதல் 3 மணி நேரத்தில் பயறு முளைத்து விடும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், தக்காளி, துருவிய கேரட்டைச் சேர்த்து வதக்கி, அதனுடன் முளைக்கட்டிய பச்சைப்பயறை சேர்த்து லேசாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மாதுளை முத்துக்கள், எலுமிச்சை சாறு, மல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Categories

Tech |