Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்கள் எப்படி இவ்வளவு”…. மோசமாக கேள்வி எழுப்பிய ரசிகருக்கு நடிகை பிரணிதா சொன்ன பதில்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரணிதா. இவர் தமிழில் சகுனி, மாஸ், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன்பிறகு சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அடிக்கடி தன்னுடைய புகைப்படம் மற்றும் குழந்தை தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். அதோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகை பிரணிதா தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடுவார்.

இந்நிலையில் நடிகை பிரணிதா குழந்தை வளர்ப்பு பற்றிய கேள்விகளை கேளுங்கள் என்று தன்னுடைய பாலோவர்களிடம் கூறினார். அப்போது ஒருவர் குழந்தை பிறந்த பிறகும் எப்படி இவ்வளவு ஹாட்டாக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நடிகை பிரணிதா நான் நல்ல நோக்கத்தோடு இதை ஆரம்பித்தேன். ஆனால் நீங்கள் இங்கு வந்து தவறான கேள்விகளை கேட்கிறீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பான பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |