Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!!… நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு பேய் பயமா….? நயன்தாரா சொன்ன பகீர் தகவலால் ரசிகர்கள் ஷாக்….!!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி டிடி நடிகை நயன்தாராவை பேட்டி எடுத்தார். இந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேய் பயம் குறித்தும் நடிகை நயன்தாரா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு பேய் மீது எல்லாம் பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது.

ஆனால் சிறுவயதில் யாரோ ஒருவர் சொன்னதற்காக நான் மல்லாக்க படுக்கவே மாட்டேன். ஒன் சைடாக தலையில் கை வைத்து தான் தூங்குவேன். ஒருவேளை நேராக நிமிர்ந்து படுத்தால் பேய் நம்முடைய உடம்பில் இறங்கி விடுமோ என்ற பயத்தில் அப்படி படுக்க மாட்டேன். தூங்கும் போது லைட் கூட ஆப் பண்ணாமல் தான் தூங்குவேன் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான பேட்டி தற்போது வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கே பேய் பயமா என்று நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்து வருகிறார்கள்.

Categories

Tech |