Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை… “600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்”…. போக்குவரத்து கழகம் வெளியிட்ட. தகவல்..!!!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதாலும், அடுத்து புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன் பதிவுகள் நிரம்பியுள்ளது.

இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. மேலும் தேவையை பொருத்து பிற வழித்தடங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |