ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று கல்யாண முயற்சி கைகூடும் நாளாகவே இருக்கும். இல்லத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கடன் சுமை குறையும். பயணங்களால் தேக நலன் பாதிக்கப்படலாம். வாக்குறுதிகளை காப்பாற்ற வழிபாடுகள் தேவைப்படும். மனைவி, பிள்ளைகளாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும். ஒற்றுமை குறையாது. உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலன்களை நீங்கள் அடையக்கூடும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும்.
ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். எதிர்பாராத சில நண்பர்களை நீங்கள் சந்திக்க கூடும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் இருந்த தடை விலகி சிறப்பான முன்னேற்றத்தை பெறுவார்கள். கல்விக்காகவும் கடுமையாக உழைப்பார்கள். நல்ல மதிப்பெண்களையும் எடுக்கக்கூடும். அதேபோல இன்று நீங்கள் யாருக்கும் எந்தவிதமான வாக்குறுதிகளையும் மட்டும் கொடுக்க வேண்டாம். அதேபோல மற்றவர்களுக்கு பண கடன் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாகவே செல்லுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு ஓரளவு சிறப்பு வாய்ந்த நிறமாகவே அமையும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்