பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ரூபாய் 1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு ரூபாய் 1000 வழங்குவது தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.