தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது பற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வரும்போது பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அவையில் அனைவரும் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் அவை உறுப்பினர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.