மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது மீண்டும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நேற்று டெல்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுவெளியில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதனையடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது,”கொரோனா இன்னும் முடியவில்லை. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் கண்காணிப்பை அதிகரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருப்பதாக” அவர் கூறியுள்ளார்.