விருச்சிகம் ராசி அன்பர்களே.! இன்று உங்களுக்கு வரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நன்மைகள் கிடைக்கும். எந்த காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புக்கள் வரலாம். இன்று குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். புதிய சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும், ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்.
மகிழ்ச்சி நிலவும். மனைவிக்கு வேண்டிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று அதுமட்டுமில்லாமல் இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். கல்வியில் நல்ல முயற்சிகளையும் பெயரில் வெற்றி பெறுவீர்கள். அதேபோல தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். நீங்கள் படிக்கின்ற பாடங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை இன்று கொடுக்கும்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்