தனுசு ராசி அன்பர்களே..! இன்று சந்தோச வாய்ப்புகளை சந்தித்து மகிழும் நாளாகவே இருக்கும். பயணம் பலன் தரக்கூடிய அளவில் இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றி இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்று முயற்சிகளில் தடை தாமதம் சந்திக்க நேரிடும் என்றாலும், எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி செல்வீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், ஒற்றுமை குறையாது. உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே திருப்தியை கொடுக்கும். உறவினர் வகையில் உங்களுக்கு உதவியும் கிடைக்கும்.
சமூக நலனில் உங்களுக்கு அதிக அக்கறை கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புகழ் ஓங்கி நிற்கும். இன்று செலவை மட்டும் தயவு செய்து குறைத்துக்கொண்டால் போதுமானதாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள், கல்வியில் வெற்றி வாய்ப்பையும் அவர்கள் பெறுவார்கள். தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடினம் பாடங்களைப் படியுங்கள், அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு ஓரளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்