மகரம் ராசி அன்பர்களே..! இன்று அரசியல்வாதிகளால் அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாகவே இருக்கும். சில நண்பர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி செல்லும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். இன்று பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. முடிந்தவரை அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது ரொம்ப, ரொம்ப நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் பலனை எதிர்பார்க்க முடியும்.
பணவரவுகள் ஓரளவு திருப்திகரமாக இருந்தாலும் பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது ரொம்ப யோசித்து தான் நீங்கள் இதை செய்யவேண்டும், பார்த்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து வாக்குறுதிகள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். அதுமட்டுமில்லை கணவன் மனைவிக்கு இடையே உங்களுக்கு அன்பு நீடிக்கும். பயணங்கள் பலன் தருவதாக இருந்தாலும், உடமைகள் மீது கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். மாணவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு பாடங்களை படித்து எழுதிப் பாருங்கள், நிதானமாக செயல்படுங்கள்.
மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே அமையும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்