Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கேப்பைக் கூழ் விற்று தமிழர்களின் பாரம்பரிய சிலம்பம் கற்கும் மாணாக்கர்..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது சத்திரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மாணவ மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், மான்கொம்பு மற்றும் சுருள்வாள் ஆகியவற்றிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து கற்று வருகின்றனர்.

அந்த கிராமத்தில் உள்ள மக்கள் இந்தப் பயிற்சிக்காக சிறந்த முறையில் பயிற்சி பெற்ற சிலம்பாட்ட ஆசிரியரை  நியமித்து அந்த கிராமத்தில் உள்ள மாணவ மாணவ மாணவிகளுக்கு பயிற்றுவித்து வருகின்றனர். இது என்ன சிறப்பு என்னவென்றால் தாங்கள் கற்கும் இந்தப் பாரம்பரிய சிலம்பாட்ட பயிற்சிக்காக ஆகும் செலவுகளை தாங்களே ஏற்பாடு செய்து கொள்கின்றனர்.

அதாவது இந்த மாணவ-மாணவிகள் கம்மங்கூழ், கேப்பை கூழ் போன்ற இயற்கை உணவுகளை கிராம பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதன் மூலம் கிடைக்கும் தொகையை தங்களது பயிற்சிக்காகவும் மற்றும் வெளியூர்களில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும் பயன்படுத்துகின்றனர். மேலும் பயிற்சிக்கு தேவையான  மூலப் பொருட்கள் வாங்குவதற்காக இந்த தொகையை பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் வறுமைக்காக  போராடவில்லை அழிந்து வரும் கலைகளை  மீட்டெடுக்கும் முயற்சியில் போராடி வருகின்றனர் இதை கண்டு அந்த ஊர் மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

சிலம்பம்  சிறப்புகள் : நம்முடைய பாரம்பரிய சிலம்பாட்டத்தை ஒவொருவரும் கற்றுக்கொள்வது அத்தியாவசியமாகும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் மனதளவிலும் பக்குவம் பெறமுடியும். தன்னபிக்கை அதிகரிக்கும் என பல சிறப்புகள் அடங்கியது சிலம்பாட்டம்.

Categories

Tech |