இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் 15000 முதல் 17,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையா என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் தான் நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறையின் வரவு செலவு குறித்த மொத்த விவரம் தெரியவரும்.
ஆனால் கடந்த 3 வருடங்களாகவே விமான போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தை தான் சந்தித்து வருகிறது. கடந்த 2019-20 ஆம் தேதி ஆண்டில் 4770 கோடி நஷ்டம் ஏற்பட்ட நிலையில், 2020-21 ஆம் நிதி ஆண்டில் 12,479 கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. 2021-22 ஆம் தேதி ஆண்டில் மொத்தமாக கணக்கிட்டால் 11,658 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் உலக அளவில் கொரோனா பாதிப்பு, விலை உயர்வு மற்றும் போர் போன்ற பல்வேறு காரணங்களால் விமான போக்குவரத்தில் துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.