Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி…. ஆதார் காணாமல் போனால் இனி கவலை வேண்டாம்…. நீங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…. எப்படி தெரியுமா….? முழு விவரம் இதோ….!!!!

ஆதார் காணாமல் போனால் இனி கவலை இல்லை.

நமது இந்தியாவில் ஆதார் என்பது ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்நிலையில் குழந்தைகளை  பள்ளியில் சேர்ப்பது முதல்  பயணம் செய்வது வரை எல்லா இடங்களுக்கும் இந்த ஆதார் அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற தேவையான ஆவணங்களை தயாரிக்கவும் ஆதார் அவசியம். இந்நிலையில் இந்த ஆதார் கார்டு தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெறுவது மிகவும் கஷ்டம். இந்த சூழ்நிலையில் தேவைப்பட்டால் நீங்கள் UIDAI என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்நிலையில் உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு அடையாள எண் உங்களிடம் இல்லை என்றால் கூட கவலைப்பட தேவையில்லை.

இந்த 2  எண்களும் இல்லாமல் நீங்கள் இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக நீங்கள் முதலில் பதிவு செய்த ஐடியை மீட்டெடுக்க வேண்டும். அதன் பிறகு  உங்கள் போனில் Get Aadhar என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்த பிறகு Enrollment ID Retrieve என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு உங்கள் எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.பின்னர்  otp விருப்பத்தை கிளிக் செய்யவும். இதனையடுத்து நீங்கள் உள்ளிட வேண்டிய பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓடிபி வரும். அதை  உள்ளிட்டு ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் நீங்கள் அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Categories

Tech |