Categories
மாநில செய்திகள்

‘நானும் கிறிஸ்துவன் தான்’ …. ரொம்ப பெருமையா இருக்கு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….!!!!

சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பாக மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்கப்பள்ளி மைதானத்தில் கிறிஸ்துவ பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, திராவிட மடல் என்றால் என்ன என அனைவரும் கேட்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இங்கு அல்லேலுயா என வாழ்த்து சொல்வது தான் திராவிட ஆட்சி. நானும் கிறிஸ்துவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் படித்தது ஒரு கிறிஸ்துவ பள்ளியில் தான். நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் இன்று உதயநிதி ஸ்டாலின் மேடையில் பெருமை உடன் பேசினார்.

Categories

Tech |