நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ்ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார். அட்சய பாத்திரம் அமைப்பின் விளம்பர தூதராகவும் உள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மருத்துவம் சார்ந்த ஏதாவது கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மருந்து கடைகாரர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதில், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒருவரின் மாத்திரையை வாங்கி பார்த்தேன். அதில், மாத்திரை காலாவதியாகிவிட்டது. ஆனால், அது தெரியாமல் அவர் பயன்படுத்தவிருந்தார். தயவு செய்து மருந்து கடைக்காரர்கள் இதுபோன்ற மருந்துகளை விற்காதீர்கள். இதனால் உடலுக்கு பல தீங்குகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.