Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி…. ”10த்தோடு 11” இதை போய் வாரிசு அரசியல்ன்னு சொல்லுறீங்க.. திருமா செம ஆதரவு …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்,  தமிழ்நாட்டின் மக்களுக்கும்…  அடுத்த நம்பிக்கை கூறியவராக இருப்பவர் தம்பி ஸ்டாலின் என்று குறிப்பிட்டவர் நம்முடைய பேராசிரியர் பெருந்தகை அவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இன்னைக்கு அன்பு இளவர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பத்தோடு ஒன்றாக ஒரு அமைச்சர் பதவி,  அவ்வளவு தான்..  ஆனால் இந்த கட்சியிலேயே கலைஞருக்கு உற்ற துணையாக இருந்த அண்ணன் துரைமுருகன் அவர்கள் பொதுச் செயலாளராக ஆகி  இருக்கிறார். அவர் என்ன ? அந்த குடும்பத்தை சார்ந்தவரா ? அண்ணன் டி.ஆர். பாலு அவர்கள் இந்த கட்சியின் கழகத்தின் பொருளாளராக இருக்கிறார்.  அவர் என்ன கலைஞரின் குடும்பத்தைச் சார்ந்தவரா ?

இந்த கட்சியில்  ஜனநாயகம் இருக்கிறது. உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது. அதனால் தான் அண்ணன் துரை முருகன் அவர்கள் பொதுச் செயலாளராகவும்,  அண்ணன் டி ஆர் பாலு அவர்கள் பொருளாளராகவும் மிகவும் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார்கள். இது ஜனநாயகம் தான். இந்தியாவிலே உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய வகையில்…  தேர்தலை நடத்தி…  முறைப்படி இந்த பொறுப்புகளில்  நியமனம் செய்யப்படுவதை இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் கடைப்பிடித்து வருகிறது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

இந்த கட்சியில் இருக்கிற உட் கட்சி ஜனநாயகத்தை யாரும் பேசுவதில்லை.  பொதுச் செயலாளர் இருந்த இடத்தில்…. பேராசிரியர் இருந்த இடத்தில் இன்றைக்கு அண்ணன் துரைமுருகன்,  சாதிக் பாட்ஷா இருந்த இடத்தில் அண்ணன் டி.ஆர் பாலு. ஆக இப்படி இந்த கட்சியிலே பொறுப்புகளை  நியமனம் செய்வதில் இருக்கின்ற உட்கட்சி ஜனநாயகத்தைப் பற்றி எவனும் பேசுவதில்லை.  பத்தோடு… பதினொன்றாக… ஒரு இளைஞர் நல பொறுப்பு,,  ஒரு அமைச்சர் பொறுப்பு,  அவ்வளவுதான்… ஆனால் இன்றைக்கு கடுமையான விமர்சனங்கள்…  எதைப் பற்றியும் கவலைப்படாமல்,  அண்ணன் தளபதி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தையும்,  தமிழ்நாட்டையும் வெற்றிகரமாக தலைமை தாங்கி வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |