Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்யலாம். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர அரசு நடத்தும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

Categories

Tech |