கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூரிய பிரகாசம் கடந்த வாரம் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததில் , கொரோனா வைரஸ் தடுப்பதற்கு அதிகமாக கைகழுவ வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றார்கள். இதன் அடிப்படையில் கைகளை கழுவுவதற்கு தேவையான நீரை வாங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி சூரியப் பிரகாசம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதில் மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ததில், மக்கள் அதிகமாக கூடுகிற டாஸ்மாக் கடை மற்றும் பார்களை மூடவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். மேலும் அதிகப்படியான மக்கள் டாஸ்மாக் கடையில் இருந்து வருவதால் குடும்பத்தினருக்கும் சுற்றுப்புறத்திலுள்ள சூழலும் பாதுகாக்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதேபோல வைரஸ் பாதிப்பால் பலியானோருக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை 10 லட்சமாக உயர்த்தி வழங்க மத்திய , மாநில அரசு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று தெரிவித்திருந்தது. இந்த மனுக்கள் மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கேரளா , கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் வணிக வளாகங்கள் திரையரங்குகள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று விளக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.