Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அரசின் ஸ்டிக்கர் ஓட்டும் திமுக அரசு: எடப்பாடி கண்டனம் …!!

அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். அதிமுக அரசு சார்பாக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்திற்குமே மூடு விழா நடத்திவிட்டு,  திமுக அரசு கொண்டு வந்ததாக புதிதாக..  திட்டங்களை தீட்டியதாக அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில், அவர் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை புதிதாக கொண்டு வந்ததாகவும், அந்த திட்டங்களை எல்லாம் மூடு விழா நடத்திவிட்டு, தற்பொழுது திமுக அரசு என்பது அந்த திட்டங்களுக்கு புதிதாக பெயின்ட் அடித்து, ஸ்டிக்கர் ஒட்டி தங்கள் தலைமையிலான அரசு கொண்டுவந்த திட்டமாக அதை காண்பிக்க முயல்வதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு திட்டத்துக்குமே அதிமுக தலைமையிலான அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கெல்லாம் மூடு விழா நடத்திவிட்டு,  திமுக தற்போது தாங்கள் கொண்டு வந்ததாக திட்டங்களாக செயல்படுத்துவது என்பது மக்கள் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவரது ஆட்சி காலத்தில்… குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் எளிமையாக துவக்கி வைக்கப்பட்ட அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு செய்ய நிதி வசூலிக்கும் இந்த திட்டமானது பெயர் மாற்றம் செய்து,  நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு 3 கோடி செலவழிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் நாளிதழ்களில் வந்த செய்திகளை மேற்கோள்காட்டி அவர் குறிப்பிட்டு இருக்கக்கூடிய அந்த செய்தி என்பது,  அரசின் நிதிநிலைமை இவ்வாறு இருக்கும் போது திமுக அரசு இவ்வாறான திட்டங்களை செயல்படுத்துவது எவ்வாறு ? என கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் சொல் ஒன்று, செயல் ஒன்று என்று இந்த அரசு செயல்படுகிறது. இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

Categories

Tech |