தமிழகத்தில் அங்கன்வாடி மையத்திற்கு விடுமுறை அளிக்காதது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் அறிவித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. மூன்று வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகள் பயிலும் அங்கன்வாடிக்கு முறையான விடுமுறை விடவில்லை என்று பெற்றோர்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். நிறைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அங்கன்வாடி அனுப்பவில்லை. இதுகுறித்து கேட்ட போது சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையாயத்திற்கு முறையான விடுமுறை அறிவிப்பு வர வில்லை என்று புகார் எழுந்துள்ளது.