தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்கள் சிலவற்றியிருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எஸ்ஆர்எம் வேலூர் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி NID பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் விடுமுறை முடிந்து திரும்பி கொண்டிருக்கும் நிலையில், விடுமுறை அளிப்பது குறித்து அரசு உத்தரவுக்காக தனியார் கல்லூரிகள் சிலர் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் மார்ச் 31ம் தேதி வரை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி பள்ளிகள் வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காரைக்காலில் இருக்கும் தேசிய தொழில்நுட்ப கழகம் விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்