Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு தடை விதித்தார் சபாநாயகர் தனபால்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை பேரவை நிகழ்வுகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் நடவடிக்கை குறித்து திமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா காரணமாக மக்களை பதற்றப்படுத்தவில்லை. உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றி வருகிறோம் என்றும் கொரோனா தொடர்பாக மக்கள் பதற்றமோ, பீதியோ அடையத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை பேரவை நிகழ்வுகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு தடை விதித்து சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

Categories

Tech |