Categories
தேசிய செய்திகள்

10 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவனுக்காக… வீடு தேடி சென்று ஆசிரியர் செய்த செயல்… நெகிழ்ச்சி….!!!!

தெலங்கானா சித்திப்பேட் மாவட்டம் பெஜாங்கி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரவீன் குமார். பெஜாங்கி பகுதியில் உள்ள பள்ளியில் மொத்தம் 64 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 4 பேர் 10ம் வகுப்பில் படித்து வருகின்றனர். இதற்கிடையில் நவீன் என்ற 10ம் வகுப்பு மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை.

இதை அறிந்த ஆசிரியர் பிரவீன் குமார் மாணவனின் இல்லத்தை தேடிச் சென்று அவரது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார்.  அதன்பின் மாணவனின் பெற்றோர்கள் ஆசிரியரிடம் பேச வந்தனர். இந்நிலையில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பெற்றோரிடம் ஆசிரியர் எடுத்துரைத்தார்.

ஒரு மாணவனின் வாழ்க்கையில் 10ம் வகுப்பு மிகவும் முக்கியமானது எனவும் எதிர் காலத்தில் எந்தப் பணிக்கு சென்றாலும் 10ம் வகுப்பு சான்றிதழ் கேட்கப்படும் எனவும் எடுத்துரைத்து இருக்கிறார். அதனை உணர்ந்த பெற்றோர், மாணவனை ஆசிரியர் உடன் அனுப்பி வைத்தனர். இவ்வாறு பள்ளிக்கு வராத ஒரு மாணவனுக்காக ஆசிரியர் வீடுதேடி வந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

Categories

Tech |