2024ம் வருடம் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தேசிய அளவில் துவங்கியுள்ளது. 2 முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் உள்ள பா.ஜ.க, 3-வது முறையும் ஆட்சி அரியணையில் அமரும் முனைப்பில் இருக்கிறது. அதே சமயத்தில் இழந்த அதிகாரத்தை மீண்டுமாக பிடிக்கும் நோக்கில், காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் அடிப்படையிலும், கட்சியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியிலும் அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி களமிறங்கி உள்ளார். அவர் பா.ஜ.க-வின் வகுப்புவாத அரசியலை எதிர்த்து மக்கள் ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் துவங்கினார். இந்த பாத யாத்திரை காஷ்மீர் வரை நடைபெறும். தற்போது இந்த பாத யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலங்கானா மகாராஷ்டிரா வழியாக ராஜஸ்தானில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் புது டெல்லியில் டிச.24-ம் தேதி நடைபெறும் ராகுல் காந்தியின் நடை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். இதனிடையில் மதுரையில் மக்கள் நீதி மய்ய கட்சியினர் பாராளுமன்றம் அடங்கிய புகைப்படத்துடன் உள்ள போஸ்டரில், “ஆழ்வார்பேட்டையே அரசியலின் பள்ளி அடிக்கப்போறோம். 2024ல் சொல்லி அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி. இவரே நேர்மை அரசியலில் பெரும்புள்ளி” என்ற வாசகத்துடன் அடங்கிய போஸ்டர் பல்வேறு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.