Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நாவின் முதல் ருசியே உப்புதான்.. அதிலும் அளவோடு இருந்தால் மட்டுமே நன்மையாகும்..!!

 உப்பு அதிகம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும்.? யாரெல்லாம் உப்பை தவிர்க்க வேண்டும்.? உப்பு அதிகம் உள்ள தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன.. இது போன்ற சந்தேகங்களுக்கு பதில் தெரிந்து கொள்ளுங்கள்..!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி நம்ம எல்லோருக்கும் தெரியும். எவ்வளவுதான் சுவையாக சமைத்து, அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவு சுவை இல்லாமல் போய்விடும். அதேபோன்று அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உப்பு என்னதான் சுவையை அதிகரித்தாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது நமக்கு விஷமாக மாறி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்  பல நோய்களை உண்டு பண்ணும்.

உப்பு சத்து என்பது அன்றாட உடல் ஆரோக்கியத்தில், உடல் செயல்பாடுகளுக்கு மிக முக்கியமானது. அதாவது சோடியம் சத்து தான் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களில் நடக்கும் செயல்களுக்கும் அவசியம். ஆனால் அதே சோடியம் சத்து அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும்  பாதிக்கப்படும் என்பது உண்மை.

இதன் பாதிப்பு வெளியில் தெரியாமலேயே இருந்து விடும். இறுதி நிலையில் சிறுநீரகக் கோளாறு அல்லது இரத்தக் கொதிப்பாக மாறிவிடுகிறது. உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகும். அதேபோன்று நீரிழிவு நோய் ஏற்படக் காரணமாகவும் அமையும். இதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடலில் சோடியத்தின் அளவு அதிகரிப்பது நல்லதல்ல என்றும், அதிலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் உப்பு மட்டும் சேர்த்து கொள்ளவேண்டும் என்றும், உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி உப்புதான் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று முட்டி, பாதம் மற்றும் கைகளில் வீக்கம் இருந்தால் அது நீர்க்காக  கூட இருக்கலாம். அதாவது உடலில் அதிகளவு சோடியம் சேரும் பொழுது உடலில் இருக்கும் நீரின் அளவை குறைக்கும்.

இதன் விளைவாக கை மற்றும் கால்களில் வீக்கங்கள் ஏற்படும். எனவே அதிக அளவு உப்பு சேர்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அடுத்து ரத்தத்தில் உப்பு அதிகம் சேர்ந்தால் அதை நீர்த்துப் போக ரத்தத்துடன் நீர் சேர்ந்து கொள்ளும். இதனால் சூழ்ந்திருக்கும் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். இதன்  அளவு அதிகரிப்பதால் இரத்த குழாய்களில் அழுத்தம் அதிகரித்து இதயத்தின் செயல்திறன் கூடும்.

இதனால் அதிக ரத்த அழுத்தம் உருவாகி பக்கவாதம், மாரடைப்பு ஏற்படும் என்றும், இந்நிலை தொடர்ந்தால் இதயம் செயலிழப்பு கூடும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று அயோடின் குறைவாக இருப்பவர்களை தவிர மற்றவர்கள் அதிகம் எடுத்துக்கொண்டால் நன்மைகளை விட தீமைகளே அதிகமாக உண்டாகும். இதனால் ஹைப்பர் தைராய்டு போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம்.

உண்மையில் ருசிக்காக உப்பு சேர்த்தாலும் குறைந்த அளவே உப்பை சாப்பிட்டு பழகினால் நாவில் உள்ள நுண் நரம்புகள் அதற்கேற்றார் போல் மாறி விடும். எனவே குறைந்த அளவு உப்பு சேர்த்த போதிலும் சுவையாக உணரமுடியும். அதிக அளவு சோடியம் நம் உடலில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். மனித உடலில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், சோடியம் ஆகியவை நான்குவிதமான தேவை.

ஆனால் நாம் சோடியம் கலந்த உப்பை மட்டுமே உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது,  நம் உடலில் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால் உடல் பருமன் அதிகம் ஆகிறது. ஆனால் அதே சமயம் உடலுக்கு தேவையான கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் வெளியேறி விடுகின்றன.

இந்த சத்துக்கள் வெளியேறுவதால் மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் மக்னீசியம் வெளியேறுவதால் உடலின் சக்தி இழக்க கூடும். உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். இதனால் மாரடைப்பு, சிறுநீரகப் பழுது ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள்.

பொதுவாக உணவுகளை  பதப்படுத்த அவற்றில் உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடவே கூடாது. ஏனென்றால் இவை வயிற்று புற்றுநோயை உண்டாக்க கூடியது. அதேபோன்று உப்பு அதிகம் சேர்க்கப்படும் சூப், ஊறுகாய், கருவாடு, அப்பளம் மற்றும் குளிர்பானங்கள் இவற்றை தவிர்ப்பதும் நல்லது.

நம் உடலுக்கு தேவையான சோடியம், சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றிலிருந்து கிடைத்துவிடும். முக்கியமாக நாம் சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்த்தால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும். ஏற்கனவே சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இன்னும் குறைவாகவே தேவைப்படும். உப்பு அதிகரிக்கும் பொழுது அதில் உள்ள அதிக சோடியம் உடலில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு கொண்டுவந்துவிடும்.

இதனால் ரத்தத்தில் தண்ணீரின் அளவு அதிகமாகி அதில் அழுத்தம் அதிகரித்துவிடும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உண்மையில் உணவில் உப்பின் அளவை குறைத்து சாப்பிட்டால் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, வயிறு சார்ந்த கோளாறுகளை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள், நீரிழிவு நோய் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கலாம்.

அதேபோன்று 50 வயதிற்கு மேற்பட்டோர் குறைந்த ரத்த அழுத்தமானது, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் உணவில் உப்பை குறைத்துக் கொள்வது நல்லது.

Categories

Tech |