அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கான மனநல நல்லாதரவு மன்றங்களை காணொளி மூலமாக முதல்வர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் வகையில் மனநல ஆதரவு மன்றங்கள் மற்றும் நட்புடன் உள்ளங்களோடு மனநல சேவை செய்யும் தொடக்க விழாவானது நடந்தது. இதனை முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மாணவர்களுக்கு பயிற்சி கையேட்டினை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மருத்துவ பயணிகள் இணை இயக்குனர் கண்ணகி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, கல்லூரியின் திருமால் பாபு குடியிருப்பு மருத்துவ இன்பராஜ் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் என பலர் பங்கேற்றனர்.