ரிஷபம் ராசி அன்பர்களே…! முன்கோபம் அதிகமாக இருக்கும்.
உறவினர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். சில நேரங்களில் பிரச்சனை உண்டாகும். எப்பொழுதும் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் தெளிவு வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். இன்று உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள் என்று சொல்ல முடியும். குடும்பத்தில் பார்த்து பக்குவமாக பேசுங்கள். நிகழ்காலத்தில் நல்ல லாபம் உண்டாகும் உத்தியோகத்தில். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுங்கள். பெண்கள் அவசரப்படாமல் பணிகளை செய்து முடிக்க வேண்டும்.
காதல் விஷயங்களில் மிக தெளிவு வேண்டும். மாணவர்கள் விளையாடும் பொழுது கவனமாக விளையாட வேண்டும். சக நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். நீங்கள் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள்ளு கலந்த சாதத்தை அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் மூன்று மட்டும் ஏழு.
அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள்.