ஐபோன் தான் விற்பனை சந்தையில் எப்போதும் அதிக மவுஸ் கொண்ட மொபைல் போன்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி ஆலையில் ஜீரோ கோவிட் கொள்கையின் காரணமாக பணிகள் முடங்கியதால் ஆலை முழுவதும் மூடப்படுவதாக நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஆஸ்திரேலியாவின் சில்லறை மற்றும் துரித உணவுப் பணியாளர்கள் சங்க ஒப்பந்த ஊழியர்கள் வார இறுதி நாட்களில் தொடர் விடுமுறை, வேலை நேரம் மற்றும் ஷிப்ட் இடைவெளி போன்றவற்றுடன் ஊதிய உயர்வு கோரிக்கைகளையும் வலியுறுத்தி இருக்கின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விற்பனை சிறப்பாக நடைபெறும் வேலையான இன்று மதியம் 3 மணி முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக உடனடி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.