கல்வி நிறுவனங்களில் மாணவர்களுடைய பாதுகாப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகிவிட்டது. அந்த அளவிற்கு மாணவர்கள் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் உடன் பயிலும் சக மாணவர்கள் மூலமாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் அனைத்து மாநில அரசுகளும் தங்களுடைய கல்வி வாரியத்தின் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதேபோல தெலுங்கானா மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சபிதா ரெட்டி மாணவர்களின் பாதுகாப்பை கல்வி நிலையங்களில் உறுதி செய்யும் பொருட்டு பாதுகாப்பு கிளப்புகளை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த கிளப்புகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மூன்றடுக்கு கண்காணிப்பு அமைப்போடு செயல்படும் என்றும் இதன் மூலம் மாணவர்கள் சந்திக்கும் அனைத்து த பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.