18.50 கோடிக்கு ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கரன் படைத்துள்ளார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை வாங்க பல அணிகள் காத்துக் கொண்டிருந்தது. அதன்படி அவர் ஏலத்தில் விடப்பட்டதுமே அனைத்து அணிகளும் அவரை வாங்க ஆர்வம் காட்டியது. இதில் சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகள் சாமக்கரணை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என மல்லுகட்ட , திடீரென உள்ளே வந்த பஞ்சாப் விடாப்பிடியாக அவரை எடுத் தீர வேண்டும் என போட்டிபோட்டு இறுதியாக 18.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சாம் கரன் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு விளையாடி உள்ளார்.
அதே சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுட்டி குழந்தையான சாம் கரன் இல்லாதது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சென்னை அணி நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளதால் ரசிகர்கள் உற்சாக மகிழ்ச்சியில் உள்ளனர். 18.50 கோடிக்கு ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கரன் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக கிரிஸ் மோரிஸ் 16.25 கோடிக்கு வாங்கப்பட்டது அதிக தொகையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
SAM-SATIONAL BUY! ❤️#SherSquad, run out of adjectives for Curran in the comments. 👇🥳#IPL2023 #SaddaPunjab #PunjabKings #SamCurran pic.twitter.com/oxJrE6AZwx
— Punjab Kings (@PunjabKingsIPL) December 23, 2022