நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை மனுதாக்கல் செய்துள்ளார்கள்.
இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகளின் நான்கு பேரில் ஒருவரான இருக்கக்கூடிய முகேஷின் ஒரு முக்கியமான மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் என்னுடைய மறுசீராய்வு மற்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பிய கருணை மனு ஆகியவற்றில் இருக்கக் கூடிய அம்சங்கள் குறித்த விவரங்கள் எனக்கு தெரிவிக்கப்படாமல் என்னிடம் கையொப்பம் பெற்று விட்டார்கள். எனவே நான் மீண்டும் மறுபரிசீலனை மற்றும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மனுவை நாங்கள் விசாரிக்க தயாராக இல்லை. விசாரிப்பதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லை. எனவே இந்த மனுவை நீங்களாகவே பெற்றுக் கொள்கிறீர்கள் ? அல்ல நாங்கள் தள்ளுபடி செய்யட்டுமா என்று கேட்டிருந்தார்கள். மனுதாரர் திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்ததையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனால் குற்றவாளிகளுக்கு இருக்கக்கூடிய அத்தனை சட்ட வாய்ப்புகளும் கிட்டத்தட்ட நிறைந்துவிட்டது. வருகின்ற 20ஆம் தேதி குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இவர்கள் சார்பாக புதிதாக அக்ஷய்குமார் , வினய் , பவன்சிங் ஆகிய மூன்று பேர் சார்பாக சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த விவகாரம் மனித உரிமை சார்ந்த விவகாரம் என்பதால் நீங்கள் இதில் தலையிட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வலியுறுத்தி இந்த மனு தாக்கல் செய்ய பட்டு இருக்கிறது. இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் குற்றவாளிகளுக்கான தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா ? என்ற கேள்வி தான் எழுந்து இருக்கின்றது. பொதுவாக இதுபோன்ற விவகாரங்கள் முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம். இந்தியாவில் ஒரு பகுதி சார்ந்தவிஷயத்தில் சர்வதேச நீதிமன்றங்கள் தலையிட்டு வதற்கான வாய்ப்பு இல்லாத சுழல் இருக்கின்றது.