Categories
தேசிய செய்திகள்

ஒரு வருஷம் ஆயிட்டு!…. ஆனால் பஞ்சாயத்துடன் இணைக்கப்படவில்லை…. கிராம மக்கள் வேதனை….!!!!!

மத்தியப்பிரதேசம் தோரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது தான் உதய்புரா கிராமம். இந்த கிராமம் மதுசூதன்கர் நகராட்சி பிரிக்கப்பட்ட போது, தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கபடும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் உதய்புரா கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் அதிகார்ப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. இது தொடர்பாக உதய்புரா மக்கள் கூறியதாவது, இதுவரையிலும் எங்களது கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கப்படாததால், அரசின் எந்த நலத்திட்டங்களையும் நாங்கள் பெற முடிவதில்லை.

இதற்கு முன் பயின்ற இளைஞர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தேர்வு எழுதுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் எங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியவில்லை. இதுபற்றி மதுசூதன்கர் நகராட்சியில் கேட்டால் பதிவுசெய்யும் பணிகள் நடந்து வருவதாக கூறுகின்றனர். ஒரு ஆண்டாக நாங்கள் ஆதரவற்றவர்களாகி விட்டோம்” என தங்கள் வேதனையை தெரிவித்தனர். ஆகவே தோரை கிராம பஞ்சாயத்தின் மெத்தனப்போக்கு காரணமாகவே உதய்புரா கிராமம் அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்க்கப்படவில்லை என சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர்

Categories

Tech |