கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “புதிய வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தற்போது காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவு. மேலும் சபரிமலையில் சாமி தரிசனம் பற்றி தற்போது எந்த கவலையும் வேண்டாம். பக்தர்கள் வீணாக பீதியடைய தேவையில்லை. தேவை ஏற்பட்டால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆனால் கடந்த காலங்களைப் போல் முழு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.